வாரிசு நடிகருக்காக சத்யராஜ் இறங்கி செய்த காரியம்.. பல வருடத்திற்கு பின்பு சம்பவம் செய்ய போகும் அம்மாவாசை

Actor Sathyaraj: தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் வில்லனாக மிரட்டி விட்ட சத்யராஜ், அதன் பிறகு 90களில்ஹீரோவாக நடித்து இப்போது டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் சிபிராஜ் சினிமாவில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் அந்த வலி எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்து வாரிசு நடிகர் ஒருவரை தூங்கி நிறுத்த பார்க்கிறார்.

வில்லனாக சத்யராஜ் மிரட்டி விட்டிருப்பார் என அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதிலும் அமைதிப்படை படத்தில் அம்மாவாசையாக படுமோசமான வில்லனாக நடித்து அசத்தார். இதனால் பல மாஸ் ஹீரோக்களும், ஏன் ரஜினியே இவரை வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்டார்.

ஆனால் அவர்களை கிட்டவராதபடி மிகப்பெரிய சம்பளத்தை கேட்டு ஓட விட்டு விடுவார் சத்யராஜ். ஆனால் தற்பொழுது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த பல மாநில மொழி படங்களிலும் நடித்து  புகழ் பெற்று வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து  நடித்து வருகிறார்.

இப்போது மீண்டும் இவருக்கு வில்லன் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் இந்த முறை அவர் மறுக்கவில்லை, நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் காரணம் நடிகர் கார்த்தி நடிக்கும் படம் இது. கார்த்தி சிவக்குமாரின் மகனாக இருந்தாலும் சூர்யா அளவிற்கு டாப் நடிகராக முடியாவிட்டாலும் அதற்கான முயற்சிகளை முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட வாரிசு நடிகரான கார்த்தியை தூக்கி விட வேண்டும் என்று சத்யராஜ், மீண்டும் அம்மாவாசையாக தன்னுடைய வில்லத்தனத்தை காட்ட  முடிவெடுத்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார், அந்த படத்தில் வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார்.  சிவக்குமார் மற்றும் சத்யராஜ் எல்லாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல தான் பழகுவார்கள்.

அதனால் எந்த கேள்வியும் இன்றி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்திற்கு பிறகு சத்யராஜ் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்களும் விரும்புகின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து வில்லனாக நடிப்பாரா என்பது சந்தேகம் தான்.

arun

Arun

அருண்- சினிமாபேட்டையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார்.

View all posts →