திடீரென எமோஷனலாக பதிவிட்ட செல்வராகவன்.. இதெல்லாம் அவமானமா நினைக்காதீங்க!நெட்டிசன்களை கவர்ந்த பதிவு

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சமூகக் கருத்துக்களைப் பதிவிட்டு பேசி வருகிறார். அதில் தன்னம்பிக்கை பேச்சுகள், அரசியல், சமூகம் என அனைத்தையும் பற்றி அவர் பேசி வருவது அவரது ரசிகர்களுக்கும், இளைஞர்களுக்கும் சிறந்த நம்பிக்கைப் பேச்சாக உள்ளது. அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட எமோஷனல் ஆன பதிவு ஒன்று மக்கள் கவனத்தை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கூட, மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கொந்தளிப்புடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அதில், “உண்மையான குரு என்பவர்களை நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைத் தேடி வருவார். உண்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார். அவ்வளவு காய்ந்துபோயா கிடக்கிறீர்கள்?” என்று ஓப்பனாகவே பேசினார்.

இந்த நிலையில், தனது படங்களுக்கு அழகான, வித்தியாசமான தமிழ் பெயர் வைக்கும் இயக்குனர் செல்வராகவன், தமிழை பற்றி எமோஷனலாக பேசியுள்ளார். அது மக்களுடைய கவனத்தை பெற்று, அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

இயக்குநர் செல்வராகவன் அந்த பதிவில் கூறியதாவது, “தமிழ் இனி மெல்லச் சாகும்ன்னு பாரதியார் சொன்னாரு. அது எந்த அளவுக்கு உண்மைன்னா தமிழ் இப்போது ஐசியு-வுல வெண்டிலேட்டர்ல இருக்கு. தமிழ்ல பேசுறத அவமானமா அருவருக்கத் தக்கதா நினைக்குறாங்க. ஸ்கூல், காலேஜ்ல இங்கீலீஷ்ல பேசமுடியாம அவமானப்பட்டு அழுதுருக்கேன். இங்கிலீஷே தெரியாம எப்படியோ கடைசி பென்ச்சுல இருந்து படிச்சு வெளியே வந்துட்டோம்.”

“அதுக்குப் பிறகு தான் ஒரு வெறி வந்துச்சு.. என்ன இங்கீலீஷ் தானா? இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இங்கீலிஷ் புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். அர்த்தம் தெரியாததற்கு பக்கத்துலயே டிக்ஸ்னைரி வச்சுக்கிட்டு இதுக்கு இதான் அர்த்தம் என தெரிஞ்சுகிட்டேன். கொஞ்சம் கஷ்டமான பிராசஸ்தான். சினிமாவுக்கு வந்த பின்னாடி தான் ஓரளவுக்கு நல்லா பேச ஆரம்பிச்சேன். நான் தமிழ். எங்க போனாலும் தமிழ்ல தான் பேசுவேன். நீங்களும் எங்க போனாலும் தமிழ்-லேயே பேசுங்க. நல்லா உயர்த்திப் பேசுங்க. அவங்க உங்கள அவமானமா பார்த்தா முறைச்சுப் பாருங்க.”

“தமிழ்ல பேசுற தமிழ்நாட்டுப் பொண்ணே போதும். உலகத்துல எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போய் பாருங்க. அவங்க அவங்க தாய் மொழியிலதான் பேசுவாங்க. இங்கிலிஷ்ல சப்-டைட்டில்தான் போடுவாங்க. வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறாங்க..உலகத்துலேயே பழமையான மொழியும் தமிழ்தான். உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன். காலம் காலமா மனசுக்குள்ள இருந்ததை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு எமோஷனலாக தமிழ் பற்றி செல்வராகவன் பேசியது, மக்கள் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் இதை அதிகமாக ஷேர் செய்தும் வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →