தனிக்காட்டு ராஜாவாக விருமன் படத்தின் 7வது நாள் வசூல் விவரம்.. தும்சம் செய்ய வந்த திருச்சிற்றம்பலம்

கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் விருமன் படம் வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடந்துள்ளது. கார்த்தியின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. அதாவது முதல் நாளே விருமன் படம் 8 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் படத்திற்கு ஏகப்பட்ட பிரமோஷன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

விருமன் படம் வெளியான ஒரு வாரத்துக்கு உள்ளாகவே படக்குழு வெற்றி விழாவும் கொண்டாடி உள்ளனர். இந்நிலையில் விருமன் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஏழாவது நாள் முடிவில் கிட்டத்தட்ட 40 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இதற்கு முக்கிய காரணம் விருமன் படம் வெளியான போது மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் விருமன் தனிக்காட்டு ராஜாவாக வசூல் வேட்டை ஆடியது. ஆனால் தற்போது இப்படத்திற்கு போட்டியாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

தனுஷின் மாறன், ஜகமே தந்திரம், தி கிரே மேன் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தனுஷின் படம் திரையரங்குகளில் வெளியானால் ரசிகர்கள் அவரது படத்தை பார்க்க ஆர்வமாக தியேட்டருக்கு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதால் விருமன் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்ற மகிழ்ச்சியில் படக்குழு இருந்தனர். அதாவது வார இறுதிக்குள் 50 கோடியை எப்படியும் நெருங்கும் என எதிர்பார்த்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தினால் விருமன் படத்தின் வசூல் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.