ஷங்கர் தற்போது ராம்சரணின் 15 வது படத்தை இயக்கி வருகிறார். இது தவிர பல வருடங்களாக கிடப்பில் போட்ட கமலின் இந்தியன் 2 படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். ராம்சரணின் படத்திற்கு 15 நாட்கள் என்றால், இந்தியன் 2 படத்திற்கு 15 நாட்கள் ஒதுக்கி ஷங்கர் வேலை பார்த்து வருகிறார்.
இந்தியன் 2 படத்தை லைக்கா உடன் கைகோர்த்து உதயநிதி தயாரித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ராம் சரணின் படம் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்து விட்டது. இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார்.
இவர்தான் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளரிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதாவது ராம்சரண் படம் இப்போது 75% நிறைவுற்றதால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானால் படத்திற்கு ஒரு ஹைப்பிருக்கும் என ஷங்கர் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாரிசு படத்தை பற்றி ரசிகர்கள் பெரிய அளவில் பேசுவதால் இப்போது ராம்சரண் படத்தின் போஸ்டரை வெளியிட்டால் வாரிசு படத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும் என்ற தில்ராஜு கூறியுள்ளார். இதனால் இப்போதைக்கு வேண்டாம் என்று ஷங்கரின் ஆசையில் மண்ணை அள்ளி போட்டுள்ளார் தயாரிப்பாளர்.
மேலும் வாரிசு படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. ஆகையால் வாரிசு படம் ரிலீசுக்கு பின்பு ராம்சரனின் படத்திற்கு பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யலாம் என்று தில் ராஜு சொல்லியுள்ளார். ஆனால் ஷங்கருக்கு இதை ஏற்க மனசு இல்லையாம்.
அதுமட்டுமின்றி இந்த விஷயம் ராம்சரணையும் வேதனைபடுத்தி உள்ளதாம். இதற்கெல்லாம் விஜயின் வாரிசு படம் தான் என்ற கோபத்தில் ஷங்கர் உள்ளாராம். ஏனென்றால் தயாரிப்பாளர் தான் முன்னுரிமை கொடுக்கிறார் என்ற நினைப்பு ஷங்கருக்கு வந்துள்ளது.