ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் தாண்டி நடைபெறுகிறது. அதாவது இந்தப் படம் தொடங்கியதில் இருந்து அடுத்தடுத்த பிரச்சனைகளை ஷங்கர் சந்தித்து வருகிறார். நடுவில் சில காலம் கிடப்பில் இந்தியன் 2 போடப்பட்டது. இந்நிலையில் பிரச்சனைகள் சமூகமாக முடிய மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
கமல் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக ஹெலிகாப்டரில் வந்து செல்லும் புகைப்படம் அண்மையில் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்காக கமல் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு போட்டியாக பிரம்மாண்ட படமும் வெளியாகிறதாம். ஷங்கர் இந்தியன் 2 உடன் இணைந்து ராம்சரனின் 15ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களுக்கும் மாதம் 30 நாட்களில் 15 நாட்கள் தனித்தனியாக ஒதுக்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.
தெலுங்கில் உருவாகி வரும் என்ற படத்தை விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தயாரிக்கிறார். அவரும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். ஆகையால் ஷங்கரின் இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொள்ள உள்ளது.
எனக்கு போட்டி எப்போதுமே நான் தான்டா என இந்த முறை 2024 பொங்கலுக்கு தில்லாக இறங்குகிறார் ஷங்கர். மேலும் இந்த இரண்டு படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளதால் படத்தின் வசூல் பல மடங்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமலும் இந்தியன் 2 படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளாராம்.
தமிழில் விஜய்யின் லியோ, அஜித்தின் ஏகே 62 மற்றும் சூர்யாவின் 42 வது படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளதாம். ஆகையால் இங்கு இந்தியன் 2 படம் டாப் நடிகர்களின் படங்களுடன் போட்டி இல்லாமல் வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் கமல் மீண்டும் ஒரு இன்டஸ்ட்ரியல் ஹிட் அடிப்பார் என எதிர்பார்க்கலாம்.