Actress Sharmili: நக்கல் மன்னனாக ஒரு காலத்தில் திரையுலகையே தன் கட்டுக்குள் வைத்திருந்த கவுண்டமணி இப்போதும் கூட தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார். இப்படிப்பட்ட இந்த ஜாம்பவானை பற்றி பல்வேறு விதமான சர்ச்சையான செய்திகள் வெளி வந்திருக்கிறது.
அப்படித்தான் தற்போது இவருடன் பல படங்களில் இணைந்து நடித்த ஷர்மிலி கூறி இருக்கும் ஒரு விஷயம் பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது என் பொழப்பை கெடுத்து வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான் என்ற குற்றச்சாட்டை அவர் முன் வைத்திருக்கிறார்.
ஏனென்றால் இவர் கவுண்டமணியோடு நடித்து வந்த சமயத்தில் ரஜினி போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் கவுண்டமணி அந்த தேதியில் தான் என் பட ஷூட்டிங் வரவேண்டும் என்று அந்த வாய்ப்புகளை எல்லாம் கெடுத்து விட்டாராம். அது மட்டுமின்றி தொடர்ச்சியாக அவருடைய படங்களில் நடித்ததால் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கிறது என்ற கதைகளும் பரவ ஆரம்பித்திருக்கிறது.
அதனால் இனிமேல் கவுண்டமணியுடன் நடிக்க மாட்டேன் என்று ஷர்மிலி கூறியிருக்கிறார். இதனால் கடுப்பான நக்கல் மன்னன் தன் படங்களிலிருந்து அவரை நீக்கியதோடு மட்டுமல்லாமல் வேறு எந்த வாய்ப்புகளும் கிடைக்க முடியாத படி செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 27 படங்கள் இருவரும் இணைந்து நடித்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் ஷர்மிலி என்ற ஒரு நடிகை இருந்த அடையாளமே தெரியாமல் போனது.
இப்படி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த ஷர்மிலி திருமணத்தில் கூட ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கிறார். இப்படியே சிங்கிளாக இருந்த அவர் 40 வயதை தாண்டிய பிறகு தான் திருமணம் செய்து இருக்கிறார். தற்போது தன்னுடைய கணவர் தன்னை அன்பாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இப்போது நான் நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறேன் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறாக கவுண்டமணியால் தன்னுடைய கேரியரை தொலைத்து விட்டு தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாமதமாக திருமணம் செய்து குழந்தை பெற இருக்கும் 48 வயது ஷர்மிலிக்கு பலரும் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.