1. Home
  2. கோலிவுட்

மரணப் படுக்கையிலும் வாய்ப்பு கேட்ட சிவாஜி.. கடைசிவரை நிறைவேறாத ஆசை

மரணப் படுக்கையிலும் வாய்ப்பு கேட்ட சிவாஜி.. கடைசிவரை நிறைவேறாத ஆசை
மரணப் படுக்கையில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு கேட்ட சிவாஜியை நினைத்தால் புல்லரிக்கிறது.

நடிகர் திலகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவருடைய தொழில் அர்ப்பணிப்பு தான். எந்த கேரக்டராக இருந்தாலும் அதற்காக தன்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பது தான் இவருடைய சிறப்பு. அதனாலேயே அவர் நடித்த பல கதாபாத்திரங்கள் காலம் கடந்தும் நினைவில் நிற்கிறது.

அப்படிப்பட்ட சிவாஜி மரணப்படுக்கையில் கூட வாய்ப்பு கேட்ட சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது அவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இயக்குனர் மணிரத்தினமும் ஹார்ட் பிரச்சனையால் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டிருந்தார்.

இதை கேள்விப்பட்ட சிவாஜி மணிரத்னத்தின் மகன் நந்தனை சந்தித்து பேசி இருக்கிறார். பொதுவாக சில விஷயங்களை பேசிய அவர் திடீரென உன் அப்பாவிடம் சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுடா என்று கேட்டிருக்கிறார். இதனால் ஆனந்த அதிர்ச்சி அடைந்த நந்தன் தன் அப்பாவிடம் இதை அப்படியே கூறியிருக்கிறார்.

இதைக்கேட்ட மணிரத்தினம் சிவாஜி போன்ற ஒரு ஜாம்பவானை வைத்து படமெடுப்பது என் பாக்கியம். விரைவில் அவருக்கான கதையை தயார் செய்வேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் நடந்த மறுநாளே சிவாஜி இறந்து விட்டார். அந்த வகையில் மரணப்படுக்கையிலும் வாய்ப்பு கேட்ட நடிகர் திலகத்தின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.

இது மணிரத்தினத்திற்கு இன்று வரை மிகப்பெரும் குறையாக இருக்கிறதாம். இதை அவர் இப்போதும் கூட வருத்தத்தோடு பேசி வருகிறார். அந்த சமயத்தில் எனக்கு சிவாஜியை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு அனுபவம் இல்லை. இருந்தாலும் அவர் என் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

இப்போது மட்டும் இருந்திருந்தால் நான் சிவாஜியை யாரும் இதுவரை பார்க்காத ஒரு கேரக்டரில் வேறு மாதிரி காட்டி இருப்பேன் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மரணப் படுக்கையில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு கேட்ட சிவாஜியை நினைத்தால் புல்லரிக்கிறது. அதனாலேயே அவர் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.