1. Home
  2. கோலிவுட்

வந்தியத் தேவனாக அவனை போடு எனக் கூறிய சிவாஜி.. மேடையில் பலநாள் ரகசியத்தை உடைத்த கமல்

வந்தியத் தேவனாக அவனை போடு எனக் கூறிய சிவாஜி.. மேடையில் பலநாள் ரகசியத்தை உடைத்த கமல்

தற்போது எங்கு திரும்பினாலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. பட ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க அனைவருக்கும் ஒரு வித ஆர்வமும், பரபரப்பும் இருப்பதை நம்மால் நிச்சயம் மறுக்க முடியாது.

எம்ஜிஆர், கமல் போன்ற பல ஜாம்பவான்களும் முயற்சித்த இந்த வரலாற்று காவியம் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் நிறைவேறி இருக்கிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் பற்றி சிவாஜி கூறிய ஒரு விஷயத்தை கமல் தற்போது மேடையில் பகிரங்கமாக போட்டு உடைத்துள்ளார்.

முதலில் எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க முயன்று அது முடியாமல் போனது. அதற்கு அடுத்து கமல் இந்த உரிமையை கைப்பற்றிய போது அதை சிவாஜி இடம் தான் முதன் முதலில் தெரிவித்திருக்கிறார். அதை கேட்டதும் மிகவும் சந்தோஷப்பட்ட சிவாஜி வந்திய தேவனாக அவனை போடு என்று ரஜினிகாந்தின் பெயரை கூறியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் நாவலில் முழுவதும் பயணிக்கும் ஒரே கதாபாத்திரம் என்றால் அது வந்தியதேவன் கதாபாத்திரம் தான். ரசிகர்களை மிகவும் கவர்ந்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினி பொருத்தமானவர் என்று சிவாஜியே குறிப்பிட்டிருக்கிறார். இந்த விஷயம் ரஜினிக்கு கூட தெரியாத ரகசியமாக இருந்திருக்கிறது.

அதை கமல்ஹாசன் சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் விழாவின் மேடையில் ரஜினியிடம் வெளிப்படையாக கூறினார். அதை கேட்ட ரஜினி சிவாஜி சாரே கூறினாரா என்று மிகவும் ஆச்சரியப்பட்டு போனார். மேலும் கமல், சிவாஜி இந்த விஷயத்தை கூறியதற்கு பிரபு தான் சாட்சி என்று கூறினார்.

இந்த விஷயம் தற்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. மேலும் கமல் எந்தவித பொறாமையும் இன்றி இந்த விஷயத்தை மேடையில் கூறியது பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அந்த வகையில் அவர் தன் நண்பன் ரஜினியை எங்கும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.