வெறும் 15 நாட்களில் உருவான சிவாஜியின் படம்.. மொத்த தியேட்டரையும் அதிரவைத்த எம் ஆர் ராதா

இன்றைய காலகட்டங்களில் ஒரு படம் எடுக்க வேண்டுமானால் குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும். ஆனால் வரலாறு படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த நேரத்தில் எடுத்த படங்களும் உருவாக்குவது உண்டு. அப்படிப்பட்ட நோக்கத்தில் 1999 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் தான் சுயம்வரம்.

இந்த படத்தை 23 மணி 58 நிமிடங்களில் படமாக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் குறைந்தது 10 ஹீரோக்கள் ஹீரோயின்கள் இருப்பார்கள்.

ஒவ்வொரு சாட்டையும் ஒவ்வொரு இடத்தில் அவர்களை வைத்து எடுத்து முடித்துவிட்டார்கள். ஆனால் 1962 இல் வெளிவந்த சிவாஜியின் ‘பலே பாண்டியா’ என்ற படம் வெறும் 15 நாட்களில் முடிந்தது. அதிலும் ஒரே இடத்தில் இந்த படத்தை 15 நாட்களில் எடுத்து முடித்திருக்கின்றனர்.

பி. ஆர். பந்துலு மற்றும் பத்மினி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தப் படத்தை முழுக்க முழுக்க காமெடி படமான இது, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு சிவாஜி கணேசன் கொடுத்த கால்சீட் வெறும் 11 நாட்கள் மட்டும்தான்.

பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் சிவாஜி மூன்று வேடங்களிலும், எம் ஆர் ராதா இதில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார்கள். சிவாஜிக்கு ஈடுகொடுத்து எம் ஆர் ராதாவும் இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்து திரையரங்கையே அதிர வைத்தார்.

பொதுவாக எம் ஆர் ராதா-சிவாஜி காம்போ நல்ல வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படமும் சான்றாக அமைந்தது. வெறும் 15 நாட்களில் சுயம்வரம் படத்திற்கு முன்பே சிவாஜியின் படம் ஒன்று எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது என்ற தகவல் தற்போது ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்திருக்கிறது.