என்னது மம்மூட்டிக்கு கேன்சரா.! பதறிப்போன ஃபேன்ஸ், உண்மை என்ன.?

Mammootty: 73 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. வெரைட்டியான கதைகள், கெட்டப் என அவர் ஒவ்வொரு படத்திலும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பிரமயுகம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து இந்த வருடமும் அவர் கைவசம் பல படங்கள் இருக்கின்றன.

ஆனால் திடீரென அவர் நடிப்புக்கு பிரேக் எடுத்துள்ளார். ஏனென்றால் அவருக்கு கேன்சர் பாதிப்பு இருக்கிறது.

அதனால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என ஒரு தகவல் தீயாக பரவியது. இதை கேள்விப்பட்ட அவருடைய ரசிகர்கள் பதறி தான் போனார்கள்.

மம்மூட்டிக்கு கேன்சரா.!

மம்மூட்டிக்கு என்ன ஆச்சு என தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஏற்கனவே கன்னட நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதேபோல் இப்போது ஒரு செய்தி வந்திருப்பது அனைவரையும் கவலை அடைய வைத்தது. ஆனால் இது உண்மை கிடையாது. யாரோ வேண்டுமென்றே கதை கட்டி விட்டிருக்கிறார்கள்.

மம்மூட்டி நலமுடன் தான் இருக்கிறார். இப்போது அவர் ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வருகிறார். அதனால் நடிப்புக்கு பிரேக் எடுத்துள்ளார்.

ரம்ஜான் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என அவருடைய பி ஆர் டீம் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

வரும் ஏப்ரல் 10ம் தேதி மம்மூட்டி நடித்துள்ள பஜுகா படம் வெளிவர உள்ளது. அதை அடுத்து களம் காவல், மோகன்லாலுடன் அவர் இணையும் படம் என லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment