1. Home
  2. கோலிவுட்

தொடர்ந்து நடிக்கலாமா வேண்டாமா?. ஒத்திகை பார்த்து ரகசியமாக காய் நகர்த்தும் விஜய்

தொடர்ந்து நடிக்கலாமா வேண்டாமா?. ஒத்திகை பார்த்து ரகசியமாக காய் நகர்த்தும் விஜய்
சமீபத்தில் மாணவர்கள் நலம் கருதி மேற்கொண்ட முயற்சி மக்களிடையே பேராதரவை பெற்று தந்தது.

Actor Vijay: தன் படத்தின் மூலம், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய், தற்பொழுது அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். அதைத்தொடர்ந்து தன்னுடைய செயல்களை ஒவ்வொன்றையும் கவனமாக, ஒத்திகை பார்த்து ரகசியமாக காய் நகர்த்தி வருகிறார்.

தன் நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டு டாப் ஹீரோவாய் வலம் வருபவர் தான் விஜய். அவ்வப்போது பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அவ்வாறு சமீபத்தில் மாணவர்கள் நலம் கருதி மேற்கொண்ட முயற்சி மக்களிடையே பேராதரவை பெற்று தந்தது.

மேலும் லியோ படத்தை முடித்து விட்டு விஜய் தற்போது அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான அரசியல் வேலைகளும் ஒரு பக்கம் செய்து வருகிறார். லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு படத்தில் கமிட் ஆகி உள்ள விஜய், இப்படத்தை முடித்துவிட்டு 2024 தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

அதற்கான வேலைகளையும் தன் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ஆரம்பித்து வருகிறார். அதை தொடர்ந்து தான் ரசிகர்களை வைத்து கட்சியாக தொடங்க முடியும் அதற்கு பல மாவட்டங்கள் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.

அவ்வாறு சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியுமா இல்லை இது மாதிரி சில வேலைகளை செய்து கொண்டு இடையில் படங்களையும் நடிக்கலாமா என முடிவு எடுக்க தன் மாவட்ட செயலாளர்களை பனையூரில் சந்திக்க இருக்கிறார் விஜய்.

இதில் எடுக்கப்படும் முடிவைக் கொண்டுதான் வெங்கட் பிரபு படத்திற்கு பின்பு நடிக்கலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர முடியும் என்பதற்காக இத்தகைய ஒத்திகையை பார்க்க திடீர் கூட்டம் போட்டு முக்கிய சந்திப்பை மேற்கொள்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.