Actress Sruthi: சின்னத்திரை சீரியல் பிரபலமான ஸ்ருதி கடந்த வருடம் அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களின் திருமணம் முடிந்து ஓராண்டு கழிந்த நிலையில் ஸ்ருதியின் கணவர் திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று முதலே இது குறித்த செய்திகள் தான் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதில் எது உண்மை பொய் என்று தெரியாத அளவுக்கு முரண்பாடான வதந்திகளும் பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ஸ்ருதி உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கணவர் இறந்த சில நாட்களிலேயே ரொம்பவும் வலியோடு இப்படி ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் பேசிய ஸ்ருதி, தேவையில்லாத வதந்திகளை சில சோசியல் மீடியா சேனல்களும், நியூஸ் சேனல்களும் வெளியீட்டு வருகின்றனர். இதனால் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ரொம்பவும் காயப்படுகிறார்கள் என்று வலியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் என் கணவரை பற்றி தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். இந்த ஒரு வீடியோவை வைத்து உண்மையான செய்தியை மட்டும் வெளியிடுங்கள் என்று அவர் தாழ்மையுடன் கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து என் கணவர் மாரடைப்பால் இறந்தது உண்மைதான். ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது அவர் இறந்து விட்டார் என்று சிலர் சொல்வது உண்மை கிடையாது.
அவர் ஒரு சிவில் இன்ஜினியர், அவருக்கு ஃபிட்னஸ் மீது ஒரு தனி ஆர்வம் இருந்தது. அதை தவிர வேறு எதுவும் கிடையாது. இந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்து நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர முயற்சி செய்து வருகிறோம். அரவிந்த் என்னை விட்டு எங்கும் செல்லவில்லை, என்னுடனே தான் இருக்கிறார் என்று வருத்தத்துடன் ஸ்ருதி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
மேலும் நீங்கள் பொய்யாக வெளியிடும் செய்திகள் வயதானவர்களை ரொம்பவும் பாதிக்கிறது. அதனால் உண்மை என்ன என்று தெரியாமல் எந்த செய்திகளையும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவருடைய இந்த வீடியோ தற்போது பலரையும் வேதனை அடைய வைத்துள்ளது. கணவர் இறந்த சில நாட்களிலேயே இப்படி ஒரு வீடியோ போடும் கட்டாயத்திற்கு ஆளான ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.