தரமான ரீ-என்ட்ரி, சித்தார்த்திற்கு அடுத்தடுத்து ரெடியாகும் 3 படங்கள்.. நயன்தாராவுடன் மல்லுக்கட்டும் டெஸ்ட்

நடிகர் சித்தார்த்துக்கு கடைசியாக தமிழில் ஹிட் கொடுத்த படம் என்றால் அது சிவப்பு மஞ்சள் பச்சை தான். அதிலும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து டபுள் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் சித்தார்த்துக்கு தமிழ் பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். அவரது பிறந்த நாளான இன்று அவருடைய அடுத்த இரண்டு படங்களின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நடிகர் வைபவை வைத்து கப்பல் என்னும் நகைச்சுவை திரைப்படத்தை எடுத்த கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் சைத்தான் கே பச்சா என்னும் திரைப்படத்தில் ராஷி கண்ணா உடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் வம்சி கிருஷ்ணா மற்றும் யோகி பாபுவும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைத்தான் கே பச்சா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது உருவான கதை தான் டக்கர். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதை களத்துடன் உருவாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் இன்று சித்தார்த்தின் பிறந்தநாள் கொண்டாட்டமாக மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலரை படக்குழு வெளியிடுகிறது.

மேலும் இயக்குனர் சசி காந்தின் அடுத்த படத்தில் சித்தார்த் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு டெஸ்ட் என பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இதில் மாதவன் மற்றும் நயன்தாரா நடிக்க இருக்கின்றனர். மாதவனும், சித்தார்த்தும் ஏற்கனவே ஆயுத எழுத்து என்னும் திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். தற்போது கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இணைவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

இந்தப் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்திருப்பது படத்தின் மீதான பரபரப்பை அதிகரித்திருக்கிறது. நயன்தாராவுக்கு இது 75 ஆவது திரைப்படம் என்பதால் இன்னும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இவர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. சித்தார்த் இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் கதை டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச்சை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆக இருக்கிறது. சித்தார்த் விளையாட்டை மையமாக வைத்து நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். அடுத்தடுத்து மூன்று படங்களுடன் சித்தார்த் கோலிவுட்டில் மிகப்பெரிய ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.