சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கை மறுத்த சிம்பு.. என் லெவலுக்கு அவ்ளோ இறங்க முடியாது பாஸ்

சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் வசூலை வாரிக் குவித்தது. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார், பைக் என பரிசுகளை வாரி வழங்கி இருந்தார். இதைத்தொடர்ந்து சிம்பு பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிம்பு பல இயக்குனர்களிடம் கதை கேட்ட வருகிறாராம். இந்த சூழலில் சிம்புவின் வாலு படத்தை இயக்கிய விஜய் சங்கர் ஒரு ரீமேக் படத்தை சிம்புவை வைத்த இயக்குவதாக இருந்தார். இந்நிலையில் சிம்புக்கு ஒரு தரமான கம்பேக் கொடுத்த படம் மாநாடு.

இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா, சிம்பு கூட்டணி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் எஸ் ஜே சூர்யா, சிம்பு காம்போவில் மீண்டும் ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். அதாவது பிரித்விராஜ் நடிப்பில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஹிந்தியில் செல்பி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். டிரைவிங் லைசென்ஸ் தமிழ் ரீமேக்கில் சிம்பு, எஸ் ஜே சூர்யா கூட்டணியில் விஜய் சங்கர் இயக்கத்தில் உருவாக்குவதாக இருந்தது. மேலும் இப்படத்தை நடிகர் பிரித்திவிராஜ் தயாரிப்பது ஆகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆகையால் ரீமேக் படத்தில் நடிக்க முடியாது என சிம்பு இந்த படத்தை நிராகரித்து விட்டாராம். இப்போது என்னுடைய லெவலுக்கு ரீமேக் படத்தில் நடிப்பது சாத்தியம் கிடையாது என சிம்பு கூறி உள்ளாராம்.

இதனால் தற்போது இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என பட குழுவினர் யோசித்து வருகிறார்களாம். மேலும் தற்போது பத்து தல படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் சிம்பு கலந்து கொண்டு வருகிறார். மிக விரைவில் பத்துதல படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட் வெளியாக உள்ளது.