சிம்பு வெற்றிமாறன் படம் அவ்வளவு தானா.. ஷூட்டிங் தொடங்குமா.? உண்மை நிலவரம்

Simbu: சிம்பு வெற்றிமாறன் இணையும் படம் தான் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக திரையுலகில் ஹாட் டாப்பிக்காக இருந்தது. தனுஷ் NOC கொடுத்ததில் தொடங்கி ப்ரோமோ சூட் என அடுத்தடுத்து பரபரப்பு தகவல்கள் தான்.

ஆனால் கடந்த சில நாட்களாக இந்த படம் ட்ராப் ஆகிவிட்டது. இனி தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை என பல செய்திகள் கசிந்து வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை.

இது சிம்புவின் ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது விசாரித்து பார்த்ததில் இது எல்லாமே கட்டுக்கதை தான். தேவையில்லாமல் யாரோ கிளப்பும் வதந்தி தான் என தெரிய வந்துள்ளது.

ஷூட்டிங் தொடங்குமா.?

தற்போது படப்பிடிப்பிற்கான செட் போடும் வேலைகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டது. அன்று கண்டிப்பாக ஷூட்டிங் நடந்தே தீரும் என்கின்றனர்.

மேலும் சிம்பு இப்போது தாய்லாந்தில் இருக்கிறார். சரியான நேரத்திற்கு அவர் வந்துவிடுவார். அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என வெற்றிமாறனுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

அப்படி என்றால் இப்படி வதந்திகளை பரப்புவது யார் என சிம்புவின் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர். எது எப்படியோ பல நாள் சர்ச்சைக்கு இப்போது ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது.