சிம்பு கைவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. பெண் பித்து பிடித்து ஆட்டிய கெட்ட நேரத்தில் தட்டி தூக்கிய தனுஷ்

Actor Simbu: நடிகர் சிம்பு சினிமாவில் என்ட்ரி ஆன நேரத்தையும், அவருக்கு இருக்கும் சினிமா அறிவையும் வைத்து பார்த்தால் இன்று நம்பர் ஒன் இடத்தில் அவர்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் காலத்திலேயே, தேவையில்லாத காதல் சர்ச்சைகள், பிரச்சனைகள் என சிக்கி தன் பெயரை கெடுத்துக் கொண்டார். அதே நேரத்தில் நிறைய பட வாய்ப்புகளும் அவரை விட்டு கைநழுவி போனது. அப்படி சிம்பு மிஸ் பண்ணிய ஐந்து சூப்பர் ஹிட் படங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

கோ: ஜீவா மற்றும் அஜ்மல் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் தான் கோ. இளைய தலைமுறைகளின் கைகளில் அரசியல் வந்தால் எப்படி இருக்கும் என்ற பார்வையில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்தில் முதலில் ஜீவா கேரக்டரில் நடிப்பதற்கு சிம்பு தான் ஒப்பந்தமானார். சில காரணங்களால் இவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். ஒருவேளை சிம்பு இந்த படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக அவருடைய சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கும்.

வேட்டை: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா மற்றும் மாதவன் இணைந்து நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் தான் வேட்டை. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டை படத்திலும் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. வழக்கம் போல இவருடைய சில நடவடிக்கைகளால் இந்த பட வாய்ப்பு கை நழுவிப் போனது.

கெட்டவன்: நடிகர் சிம்பு இயக்கி நடித்த படம் தான் கெட்டவன். இந்த படத்தில் அவருடன் நமீதா மற்றும் சந்தானமும் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் முதலிலேயே ரிலீஸ் ஆகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சில பிரச்சனைகளால் படத்தின் வேலைகள் பாதியோடு நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

வடசென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் வட சென்னை. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு என்று சொன்னால் நம்ப முடிகிறதா. உண்மையில் இந்த படத்தில் நடிப்பதற்காக வெற்றிமாறன் அணுகியது சிம்புவை தான். வழக்கம் போல சிம்புவின் ஆட்டிட்யூட் காரணத்தால் இந்த வெற்றி படம் அவர் கை விட்டு போனது.

வேட்டை மன்னன்: இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு முதல் படமாக அமைய வேண்டியது தான் இந்த வேட்டை மன்னன் படம். சிம்பு நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பட வேலைகள் நிறுத்தப்பட்டது. ஜெயிலர் படத்திற்கு பிறகு இந்த வேட்டை மன்னனை திரும்ப ஆரம்பிக்க மறைமுகமாக நெல்சன் கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →