1. Home
  2. கோலிவுட்

18 வயசு காலேஜ் ஸ்டுடென்ட் போல் மாறிய சிம்பு.. சோசியல் மீடியாவை திக்கு முக்காட வைக்கும் புகைப்படம்

18 வயசு காலேஜ் ஸ்டுடென்ட் போல் மாறிய சிம்பு.. சோசியல் மீடியாவை திக்கு முக்காட வைக்கும் புகைப்படம்
சிம்புவின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.

Simbu Recent Photo: மாநாடு படத்திற்குப் பிறகு வேற லெவலில் உருமாறி இருக்கிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் சிம்புவின் திரை வாழ்க்கையை திருப்பி போட்ட படம் என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த நிலையில் அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை சிம்பு கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் வெந்து தணிந்தது காடு, பத்து தல என வசூல் ரீதியாக வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் சிம்பு அடுத்ததாக கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். மாநாடு படத்திற்கு முன்பு சிம்பு உடல் பருமன் அதிகமாக இருந்தார். அதன் பிறகு கடின உடற்பயிற்சி மூலம் தனது உடம்பை குறைத்திருந்தார்.

அதுவும் வெந்து தணிந்தது காடு படத்தில் மிகவும் ஸ்லிம்மாக காட்சியளித்தார். இந்நிலையில் கமலுடன் சிம்பு இணைய உள்ள படத்தில் அவரது நியூ லுக் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது மலேசியாவில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக சிம்பு தனது குடும்பத்துடன் மலேசியா சென்றிருந்தார். அதுமட்டுமின்றி யுவனின் இசை நிகழ்ச்சியில் சிம்பு பாடிய பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது. மேலும் மலேசியாவில் சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

அதாவது தேசிங்கு பெரியசாமி படத்திற்காக ஏற்கனவே சிம்பு வெளிநாட்டுக்கு சென்று சில கலையை பயின்றதுடன் உடம்பையும் குறைத்து இருந்தார். இப்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது கிட்டத்தட்ட 18 வயது காலேஜ் ஸ்டுடென்ட் போல் சிம்பு மாறி இருக்கிறார். சோசியல் மீடியாவே இந்த புகைப்படம் திக்கு முக்காட செய்து வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் நீண்ட தாடி, கூலிங் கிளாஸ் என மாஸ் லுக்கில் சிம்பு இருக்கிறார். விரைவில் தேசிங்கு பெரியசாமி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஆகையால் அதற்கு சிம்பு ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். விரைவில் இந்த படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.