1. Home
  2. கோலிவுட்

தக் லைஃப் கொடுத்த ஏமாற்றம்.. சிம்புவின் சம்பள திட்டம் தவிடுபொடி

தக் லைஃப் கொடுத்த ஏமாற்றம்.. சிம்புவின் சம்பள திட்டம் தவிடுபொடி

Simbu : மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடிக்க இருந்த நிலையில் அவர் விலகிய பிறகு சிம்பு கமிட்டானார். அதுமட்டுமல்லாமல் கேமியோ ரோலாக இருந்த இந்த கதாபாத்திரம் அதன் பிறகு கமலுக்கு நிகராக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக மாற்றப்பட்டது.

இதனால் சிம்பு மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். எனவே படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை அடுத்தடுத்த படங்களில் உயர்த்திக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் சிம்பு இருந்தார். ஆனால் படம் குறைந்த வசூலை பெற்று மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இது சிம்புவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனால் அடுத்ததாக படத்தின் தயாரிப்பாளர்கள் இடம் சம்பள உயர்வு பற்றி பேசுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இப்போது வெற்றிமாறனுடன் வடசென்னை 2 படத்தில் சிம்பு இணைந்திருக்கிறார்.

சிம்புவின் சம்பளத்தில் ஏற்பட்ட சிக்கல்

இதன் போஸ்டர் இன்று வெளியாகி உள்ள நிலையில் ராஜன் வகையரா அணியில் சிம்பு நடிக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் ஒரு படத்தில் சிம்பு இணைகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

முதலில் சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றி படங்களை தான் கொடுத்து வந்தார். அவரின் மார்க்கெட் உச்சத்தில் போன நிலையில் மணிரத்னத்தை நம்பி இறங்கிய தக் லைஃப் படம் தான் அவருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.

ஆனால் படத்தில் கமல் மற்றும் சிம்புவின் நடிப்பு அபாரம். இப்போது வெற்றிமாறனை நம்பி முதல் முறையாக சிம்பு இறங்கிய நிலையில் கண்டிப்பாக அவருக்கு மாஸ் ஹிட் படமாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.