சிவகார்த்திகேயனுக்கு ஆப்பாய் மாறிய அக்கடதேச படம்.. அட்லீ போல் மாறியதால் மண்ணைக் கவ்வ போகும் சம்பவம்

Actor SivaKarthikeyan: நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெற்றி கண்ட படம் தான் மாவீரன். அதை தொடர்ந்து அடுத்த கட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் இவருக்கு மீண்டும் ஆப்பாய் மாறிய தெலுங்கு படம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

மாவீரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மேற்கொள்ளும் படம் தான் எஸ்.கே 21. ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஒரு உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு கேப்டன் முகுந்த் என்பவரது வாழ்க்கை வரலாற்றை தான் படமாக நடித்துக் கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன். அதிலும் குறிப்பாக காஷ்மீர் சோல்ஜரை சம்பந்தப்பட்ட உண்மை கதையாய் உருவாக உள்ளது.

பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி உருவாகும் இப்படத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வரும் இச்சமயம் அக்கட தேசமான டோலிவுட் சினிமாவில் இதே கதை அம்சம் கொண்ட படம் தற்போது ரிலீஸாகி உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படம் தெலுங்கில் ஓடுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. மக்கள் ஒரே மாதிரி படங்களை ஏற்க மறுப்பார்கள். ஏற்கனவே பல படங்களை காபி கேட் செய்து வரும் அட்லீ போல் இவரும் மாறிவிட்டாரா என நினைக்க, வாய்ப்பு உள்ளதால் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்.

தற்போது தெலுங்கு மார்க்கெட்டால், எஸ் கே 21க்கு ஆப்பாக மாறி உள்ளது. இதை எப்படி சமாளிக்க போகிறார் சிவகார்த்திகேயன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதைத்தொடர்ந்து இப்படத்தின் கதை மாற்றம் இருக்குமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.