அஜித் குமார் சம்பவத்தில் மௌனம் காக்கும் சூர்யா, எஸ்கே.. அமைதிக்கான காரணம் என்ன?

Suriya : சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் தான் அஜித் குமாரின் மரணம். தொடர்ந்து தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் அஜித்குமாரின் இறப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகருமான விஜய் அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியிருந்தார். மேலும் இரண்டு லட்சம் நிதி உதவியும் வழங்கி இருந்தார். பல பிரபலங்கள் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் சில பதிவுகளை போட்டிருக்கிறார். அதாவது சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரண வழக்குக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா இருவரும் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

sivakarthikeyan
sivakarthikeyan

அஜித் குமார் சம்பவத்தில் அமைதியாக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா

ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் மரணத்திற்கான காரணம் வெளியே வர வேண்டும் என்றும் அதற்கான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும் பதிவுகள் போட்டிருந்தனர். அதோடு லாக்கப் அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

suriya
suriya

ஆனால் தற்போது அஜித் குமார் சம்பவத்தில் எந்த கண்டனமும் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன் என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் மணி பேசும் போதும் சாத்தான்குளம் சம்பவத்திற்கு சத்யராஜ், பிரகாஷ்ராஜ், சிவகார்த்திகேயன், சூர்யா போன்றோர் கண்டனம் தெரிவித்தனர்.

blue-sattai-maran
blue-sattai-maran

இப்போது மௌனம் காப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அரசியல் காரணங்களால் அமைதியாக இருக்கிறார்களா என்று பேசப்பட்டு வருகிறது. சூர்யா இதுபோன்ற சம்பவங்களுக்கு முதலில் தனது கண்டனத்தை தெரிவித்துவிடுவார். ஆனால் இப்போது அவருடைய செய்கை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.