Madharasi: இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே டாப் ஹீரோக்களின் படங்கள் ஒவ்வொரு மாதமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் விடாமுயற்சி, வீரதீரசூரன், குட் பேட் அக்லி என லிஸ்ட் பெரிதாக இருக்கிறது.

இந்த படங்களை தொடர்ந்து மே 1 சூர்யாவின் ரெட்ரோ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து தக் லைஃப், குபேரா, கூலி, இட்லி கடை என படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.
போஸ்டரோடு வெளியான ரிலீஸ் தேதி
இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி செப்டம்பர் 5 வெளியாகும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் என உலகம் முழுக்க வெளியாகிறது. இதற்கு ரசிகர்கள் இப்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் தலைப்பை வைத்து படம் நிச்சயம் கலவரம் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என கணிக்கப்பட்டது. அதற்கேற்றார் போல் போஸ்டரும் அதிரடி ஆக்சன் ஆக இருக்கிறது.
இந்த தேதியில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. கடந்த வருடம் விஜயின் கோட் இதே தேதியில் தான் வெளியானது. அப்போது எஸ்கே கையில் அவர் துப்பாக்கி கொடுத்ததை ரசிகர்கள் கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.