கட்டுமஸ்தான உடம்பை காட்டி ஹிட் கொடுத்த 6 ஹீரோக்கள்.. அதைக் கூட காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan : தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் டாப் ஹீரோக்கள் பிளாக் பனியன் போட்டு சில காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த படங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் தற்போது கமல் தயாரிப்பில் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் அதில் சிவகார்த்திகேயன் கருப்பு நிற பனியனில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. முந்தைய ஹீரோக்கள் இதை பின்பற்றிய நிலையில் சிவகார்த்திகேயனும் இப்போது ஃபாலோ செய்கிறார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இதற்கு முன்னதாக கருப்பு பனியை அணிந்து படங்களில் நடித்த ஹீரோக்களை பார்க்கலாம். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் தனது சட்டையை கழட்டி விட்டு கருப்பு நிற பனியன் உடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அடுத்ததாக விஜய் மெர்சல் மற்றும் மாஸ்டர் படத்தில் கருப்பு பனியன் உடன் சில காட்சிகளில் வலம் வந்திருக்கிறார்.

வேதாளம் படத்தில் அஜித் கருப்பு நிற பனியுடன் மாஸ் காட்டியிருப்பார். தனுஷ் பெரும்பான்மையான படங்களில் இதுபோன்று வரும் நிலையில் பொல்லாதவன் படத்தில் சண்டை காட்சியில் கருப்பு நிற பனியனுடன் நடித்திருப்பார். அதேபோல் விக்ரமுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த தூள் படத்தில் கருப்பு பணியனுடன் நடித்திருந்தார்.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் கருப்பு நிற பனியன் உடன் சில காட்சிகளில் வர இருக்கிறார். அந்தவகையில் இப்போது இந்த லிஸ்டில் சிவகார்த்திகேயன் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடம்பை இரும்பாக்கி கருப்பு நிற பனியனுடன் தனது 21 ஆவது படத்தில் நடித்துள்ளார்.