சம்பள உயர்வைப் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூலைக் பார்த்த திரைப்படமும் இதுதான். அதனால் அவர் தனது சம்பளத்தை ஏற்றிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இதைப்பற்றி சிவகார்த்திகேயனிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், நான் என்னுடைய சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், தயாரிப்பாளர்கள் தான் என்னுடைய சம்பளத்தை முடிவு செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தையும் அவர் தன் சொந்த பேனரில் தயாரித்து வருகிறார். மேலும் இவர் மட்டுமல்லாமல் இவருடன் சேர்ந்து மற்றொரு தயாரிப்பாளரும் சேர்ந்து தான் அந்த படத்தை தயாரிக்கின்றனர்.

அதனால் எப்படி பார்த்தாலும் இவருக்கு படத்தின் வெற்றியில் இருந்து பல கோடி வரை லாபம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் தனியாக சம்பளம் வேறு பெற்றுக் கொள்வார். இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

கடந்த வருடம் வெளியான டாக்டர் திரைப்படத்தைக் கூட கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து தயாரித்தனர். 40 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் 100 கோடி தாண்டியும் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் இவர்களுக்கு படத்தின் லாபமே எக்கச்சக்கமாக கிடைத்திருக்கும்.

அதன் பிறகுதான் சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை கோடிக்கணக்கில் ஏற்றினார். தற்போது அவர் பெரிய நிறுவனங்களுக்கு படம் நடித்துக் கொடுக்க கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் அவருடைய சம்பளம் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் வரை ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய சம்பளத்தை ஏற்றவில்லை, தயாரிப்பாளர் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.