தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்த SK.. இப்ப குறுக்க மறுக்க ஓடும் திடீர் தளபதி, என்னவா இருக்கும்.?

Sivakarthikeyan: சமீபகாலமாக சிவகார்த்திகேயன் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயங்கள் வெளியாகி டிரண்டிங்கில் இருக்கிறது.

இது எல்லாம் அமரன் படத்திற்கு பிறகு தான். அப்படத்தின் வெற்றி அவரை பெரிய அளவில் கொண்டு சேர்த்து விட்டது.

அதற்கு ஏற்றார் போல் விஜய் துப்பாக்கியை கொடுத்ததை தங்களுக்கு சாதகமாக ரசிகர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

இதை ப்ளூ சட்டை மாறன் கூட திடீர் தளபதி என கிண்டல் அடித்திருந்தார். அதை அடுத்து தற்போது அவர் வாரத்துக்கு நான்கு முறை குறுக்க மறுக்க ஓடும் சிவகார்த்திகேயன் என நக்கல் அடித்துள்ளார்.

தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்த SK

அதாவது சிவகார்த்திகேயன் நல்லகண்ணு ஐயா, கேரளா முதல்வர் ஆகியோரை சந்தித்ததில் தொடங்கி புலிகளை தத்தெடுப்பது கிரிக்கெட் வீரரை பாராட்டுவது என ஏதோ முயற்சி செய்து வருகிறார் என ப்ளூ சட்டை ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கனவே அவர் கேரள முதல்வரை சந்தித்தது விழாவில் பங்கெடுத்துக் கொண்டது ஆகிய போட்டோக்கள் வெளிவந்தது. அதை பார்த்து சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வரப்போகிறாரோ என்ற பேச்சு எழுந்தது.

அதைத்தொடர்ந்து அவருடைய நடவடிக்கைகள் அதை உறுதி செய்வது போல் இருக்கிறது என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர்.

மற்றொரு பக்கம் ப்ளூ சட்டை மாறனை நீங்கதான் கருத்து சொல்றேன்னு குறுக்க மறுக்க ஓடிட்டு வரீங்க என எஸ்கே ரசிகர்கள் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.