1. Home
  2. கோலிவுட்

விடாப்பிடியாக இருக்கும் கமல்.. கன்னட படங்களுக்கு வழுக்கும் எதிர்ப்பு

விடாப்பிடியாக இருக்கும் கமல்.. கன்னட படங்களுக்கு வழுக்கும் எதிர்ப்பு

Kamal : கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படம் வருகின்ற ஜூன் 5 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷனில் கமல் கலந்து கொண்ட போது கன்னட மொழி பற்றி பேசியது சர்ச்சையாக வெடித்தது.

அதாவது தமிழில் இருந்து தான் கன்னட மொழி தோன்றியது என்று கூறியிருந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது என்றும் கூறியிருந்தனர்.

இன்று கமல், தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறாக புரிந்து கொண்டால் எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என்று அதிரடி காட்டி விட்டார். கர்நாடகாவில் தக் லைஃப் படத்தில் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கமலுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும்.

கன்னட படங்களுக்கு வழுக்கும் எதிர்ப்பு

தன்னுடைய கூற்றில் எந்த தவறும் இல்லை என்பதில் கமல் விடாப்பிடியாக இருக்கிறார். இந்நிலையில் கர்நாடகாவில் எவ்வாறு தக் லைஃப் படத்திற்கு எதிர்ப்பு உள்ளதோ அதேபோல் தமிழிலும் கன்னட படங்களை எதிர்க்க முடிவெடுத்து இருக்கின்றனர்.

அதாவது கன்னட மொழியில் வெளியான கே ஜி எஃப், காந்தாரா போன்ற படங்கள் தமிழில் தான் அதிக வசூலை பெற்று தந்தது. காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் கே ஜி எஃப் 3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

அந்த படங்களை தமிழில் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆகையால் இப்போது கன்னட சினிமாவிற்கு தான் பெரிய நஷ்டம் ஏற்பட இருக்கிறது. இனி கன்னட மொழியில் வெளியாகும் படங்கள் தமிழில் வெளியாக பெரிய சிக்கல் ஏற்படும்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.