இயக்குனர் வெற்றிமாறன் நீண்ட நெடுங்காலமாக எடுத்து வரும் படம் விடுதலை, சூரி கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் எடுத்த காட்சியையே சில மாற்றம் செய்து மீண்டும் மீண்டும் எடுத்து வருகிறாராம்.
இதனால் ஏகப்பட்ட மாற்றங்கள் மட்டுமின்றி படத்தில் குளறுபடிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் விடுதலை படத்தின் கதை ஆசிரியர் ஜெயமோகன். இவர் பல புதினங்கள், சிறுகதைகள் ஆகியவை எழுதி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இவர் எழுதிய கதையை தான் தற்போது வெற்றிமாறன் படமாக எடுத்து வருகிறார்,
இதனால் ஜெயமோகனுக்கு 15 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் படம் எப்படி வருமோ என்ற பதட்டத்தில் ஜெயமோகன் உள்ளாராம். ஏனென்றால் இவ்வளவு நாள் படத்தை வெற்றிமாறன் ஜவ்வாக இழுத்து வருகிறார் அதுமட்டுமின்றி ஜெயமோகனிடம் படத்தை போட்டு காட்ட வேண்டும் என வெற்றிமாறனுக்கு கட்டளையிட்டுள்ளார்
ஏற்கனவே இவருடைய நாவலில் இருந்து உருவானதுதான் வெந்து தணிந்தது காடு படம். ஆனாலும் கௌதம் மேனன் அந்தக் கதையில் நிறைய மாற்றங்கள் செய்து இருந்தார். இதனால் ஜெயமோகனுக்கு சற்று மனக்கஷ்டம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் இதே போல் விடுதலை படத்திலும் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே படத்தை போட்டு காட்டுமாறு ஜெயமோகன் கூறியுள்ளார். இதனால் வெற்றிமாறன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறாராம்
அதுமட்டுமின்றி படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சூரி இப்படத்தில் உள்ள கெட்டபின் காரணமாக மற்ற படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் உள்ளார். விடுதலை படத்தை மலைபோல் நம்பி இருக்கும் சூரிக்கு இப்படம் வெற்றியை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.