Gangers: சுந்தர் சி இயக்கி நடித்துள்ள கேங்கர்ஸ் நேற்று வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு வடிவேலுவும் இதில் கூட்டணி அமைத்திருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருந்தது.
அதற்கேற்றார் போல் ட்ரெய்லர் ரசிக்கும் படியாகவே இருந்தது. அது மட்டும் இன்றி சுந்தர் சி வடிவேலு இணைந்து வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து பிரமோஷன் செய்தனர்.
இப்படி ஆவலை ஏற்படுத்தியிருந்த படத்தை பார்த்த எல்லோரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். முதல் பாதி பெரிய அளவில் காமெடியாக இல்லை.
வாழ்ந்து கெட்ட வடிவேலு
ஆனால் இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது என கூறி வந்தனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல இப்படத்தை ஊமைக்குத்தாக குத்தி இருக்கிறார்.
அதன்படி ஒரு காலத்தில் வடிவேலு எதை செய்தாலும் சிரிப்பு வரும். ஆனால் இந்த படத்தில் என்னென்னவோ செய்து பார்க்கிறார் நமக்கு தான் சிரிப்பே வரல.
வாழ்ந்து கெட்ட வடிவேலு என பரிதாபப்பட்டுள்ளார். மேலும் சுந்தர் சி படம் என்றாலே மூளையை கழட்டி வைத்து விட வேண்டும். இப்படத்திலும் அதுதான் இருக்கிறது.
அவர் படத்தில் வழக்கமாக நிறைய ஹீரோயின்கள், காமெடி, கிளாமர் சாங் என இருக்கும். ஆனால் இதில் எல்லாமே குறையாக இருக்கிறது.
இப்படி மனித வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியங்கள் எதுவுமே இல்லாத சுந்தர் சி படம் என முடிந்த அளவு பங்கம் செய்திருக்கிறார்