Soori-Maaman: சூரி ஹீரோ அவதாரம் எடுத்து மிரட்டி கொண்டிருக்கிறார். விடுதலை படத்தில் தொடங்கி அடுத்ததாக கருடன், கொட்டுக்காளி, மாமன் என அவருடைய மார்க்கெட் உயர்ந்து கொண்டிருக்கிறது.
மக்களும் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொண்டு விட்டனர். அந்த சந்தோஷத்தில் தற்போது அவர் புது அவதாரம் எடுத்துள்ளார்.
விலங்கு வெப் சீரிஸ் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் மாமன் படத்தை இயக்கியுள்ளார். ஆனால் கதை சூரி எழுதியது. இது எல்லோருக்கும் ட்விஸ்ட் கலந்த சர்ப்ரைஸ் தான்.

தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தாய்மாமன் பாசத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டி இருக்கிறது ட்ரெய்லர்.
கடைக்குட்டி சிங்கம் மாதிரி இருக்கே
அதில் சூரி இதுவரை இல்லாத அளவுக்கு அசத்தல் பர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். அதே சமயம் கதாசிரியராகவும் அவர் மாறி இருப்பது எதிர்பாராதது தான்.
அவருடைய இந்த முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனாலும் ட்ரைலர் கடைக்குட்டி சிங்கம் படத்தை நினைவு கொண்டு வருகிறது.
இருந்தாலும் முழு படம் எப்படி இருக்கும் என பார்த்தால் தான் தெரியும். வரும் மே 16 வெளியாகும் இப்படத்திற்கு போட்டியாக சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் வெளியாகிறது.
காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறி இருக்கும் இந்த இருவரின் போட்டி எப்படி இருக்கிறது யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.