1. Home
  2. கோலிவுட்

ரோலக்ஸ் மாதிரி அடுத்த ரத்தக் கலரியான ஹீரோவை களம் இறக்கிய லோகேஷ்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

ரோலக்ஸ் மாதிரி அடுத்த ரத்தக் கலரியான ஹீரோவை களம் இறக்கிய லோகேஷ்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே
விக்ரம் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அதில் சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க இருப்பது ரொம்பவும் சஸ்பென்ஸ் ஆக இருந்தது.

Leo Movie Update: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிப்பார்கள் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய தேடலாகவே மாறிவிட்டது. அதற்கு ஏற்றவாறு லோகேஷும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக யாரும் எதிர்பாக்காத நடிகர்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்கிறார்.

விக்ரம் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அதில் சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க இருப்பது ரொம்பவும் சஸ்பென்ஸ் ஆக இருந்தது. பட ரிலீஸுக்கு சில நாட்களுக்கு முன்னதாக தான் சூர்யா நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அப்போதும் சூர்யாவின் கேரக்டர் பற்றி பட குழுவினரால் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை.

ஆனால் லியோ திரைப்படத்தை பொருத்தவரைக்கும் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், ஏஜென்ட் டீனா, மாயா போன்றவர்கள் நடிப்பது முன்னதாகவே தெரிந்து விட்டது. இதனாலேயே இந்த படத்தில் நடிக்க போகும் அந்த சஸ்பென்ஸ் கேரக்டர் யார் என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர்களின் பெயர் இதில் சேர்ந்து வருகிறது.

இந்த நிலையில்தான் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் தான் லியோ படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இவரின் அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக தான் அமைந்தது. லியோவில் அடுத்தடுத்து இனி நடிகர்கள் இணையவும் அதிகம் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் நடிகர் தனுஷ் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் எல் சி யு வில் இணைகிறார் என்ற செய்தி வைரலாகி கொண்டு இருக்கிறது. ஆனால் இது வதந்தி தான், தனுஷ் இந்த படத்தில் நடிக்க வில்லை என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் இது வதந்தி தானா அல்லது லோகேஷ் கனகராஜ் வழக்கம்போல் வைக்கும் சஸ்பென்ஸ் கேரக்டர் தனுஷ் தானா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியும்.

நடிகர் தனுஷுக்கு அடுத்து கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மீசை மற்றும் தாடியுடன் வளம் வந்து கொண்டிருந்த தனுஷ் சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்று மொட்டை போட்டிருக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு இவர் பாலிவுட்டில் பணம் பண்ண இருக்கிறார். ஒருவேளை விஜய் உடன் தனுஷ் லியோ படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் அது நல்ல வரவேற்ப்பை பெறும்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.