விஜய்க்கு மிஷ்கின் எழுதிய கதை.. ஆனா சிக்குனது ஒரு புள்ள பூச்சி

Mysskin Upcoming Movie: இயக்குனராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த மிஷ்கின், இப்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் விஜய்யின் லியோ போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் முரட்டு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் மறுபடியும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்.

அதிலும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிஷ்கின் எழுதிய கதையில் விஜய்க்கு பதில் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் டாப் ஹீரோ ஒருவர் நடிக்கிறார். பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி அடுத்ததாக முழு நீள படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

சமீப காலமாகவே விஜய் சேதுபதியின் படங்கள் எதுவும் ஹிட் ஆகுவதில்லை. சொல்ல போனால் ரசிகர்களுக்கு இவர் முகமே மறந்து போய்விட்டது. அதனால் இப்போது மிஷ்கின் இயக்கும் ஹாலிவுட் ரேஞ்ச் படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். முதலில் இந்த படத்தின் கதையை விஜய்யை மனதில் வைத்து தான் மிஷ்கின் எழுதி இருக்கிறார்.

விஜய் செம பிஸியாக இருப்பதால் இப்போது விஜய் சேதுபதி வைத்து எடுக்க உள்ளார். இந்த படம் பிப்ரவரியிலேயே தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இன்னும் தொடங்கவில்லை, தற்போது முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்க முடிவெடுத்தனர்.

ஆனால் விஜய் சேதுபதி இன்னும் சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்திற்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இப்போது அவர் இந்த படத்திற்காக தேதி ஒதுக்கி உள்ளதாகவும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் முதல் கட்ட சூட்டிங் நடக்கவுள்ளது. இந்த படத்தின் கதையை பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அதே ட்ரெயினில் தான் விஜய் சேதுபதியும் பயணிக்கிறார். அவர் அந்த வெடிகுண்டை வெடிக்காமல் செயல் இழக்க வைக்க போராடுவது தான் இந்த படத்தின் கதை. சுவாரசியம் நிறைந்த பரபரப்பான கதைகளைக் கொண்ட இந்த படம் மிஷ்கினுக்கு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதிக்கும் பெரிய திறப்பு முறையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.