மீண்டும் சிவகார்த்திகேயன் இயக்குனரை லாக் செய்த தலைவர்-170.. நெல்சன் மிஸ் ஆனா நீதான் காப்பாத்தணும்

தலைவர் 169 சூட்டிங் ஜோராக  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படம் தொடங்கிய கையோடு அடுத்து ஒரு முக்கிய அறிவிப்பும் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. ரஜினி உடல்நிலை நன்றாக இருக்கும்போதே இரண்டு, மூன்று படங்கள் பண்ணி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி நிறைய கதைகள் கேட்டு ஒருவரை ஓகே பண்ணி நடித்துகொண்டிருக்கும் படம் தான் தலைவர் 169. அது நம்ம பீஸ்ட் படமெடுத்த நெல்சன் தம்பிதான். தலைவர் 169 படத்திற்கு ஒரு மாஸ் கதையை கேட்ட ரஜினிக்கு பிடித்தவாறு கதை எழுதி ஓகே செய்துள்ளார் நெல்சன்.

இப்படி ரஜினி நிறைய கதைகள் கேட்டதில் ஒன்று தான் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் கதை. அந்த கதையும் ரஜினிக்கு பிடித்து போனதால் அதையும் அடுத்து பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். இப்போது தலைவர் 169  படம் ஆரம்பித்தவுடனேயே அடுத்த படத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு விட்டார் ரஜினிகாந்த்.

சிபி சக்கரவர்த்தி படத்தையும் எடுப்பதற்கு தயாராகிவிட்டனர். இந்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 170 சிபி சக்கரவர்த்தி இயக்க, லைகா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.

ரஜினியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக கமல், ரஜினி போன்றவர்கள் இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை வாரி வழங்குவது அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இளைய சமுதாயத்தினருடன் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் எளிதாக இறங்கி செயல்படுவது பாராட்டக்கூடிய விஷயம் ஆகும். இப்பொழுது கமல், லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் எனும் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.