இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் சுந்தர் சி. ஆனால் சமீப காலமாகவே இவர் இயக்கும் படங்கள் படு தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான காபி வித் காதல் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதன் தொடர்ச்சியாக அடுத்த படத்தை இயக்க தயாரான சுந்தர்.சி-யை கெட்ட நேரம் வாட்டி வதைக்கிறது.
ஏனென்றால் அவரின் அடுத்த பட கூட்டணியிலிருந்து டாப் ஹீரோ விலகி உள்ளார். இவருடைய இயக்கத்தில் அடுத்தடுத்து அரண்மனை படத்தின் 3 பாகங்களும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 4-வது பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுகிறார். ஏனென்றால் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான ஃபார்சி என்ற வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதை அடுத்து தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து, ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜெக்டில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் இணைவார் என்ற அறிவிப்புடன் புகைப்படமும் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த நேரத்தில் படத்திற்கான கால்ஷீட் டை ஒதுக்க முடியாத நிலையில் விஜய் சேதுபதி இருப்பதால், படத்திலிருந்து விலகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக விஜய் சேதுபதி கமிட்டான ரோலில் சுந்தர்.சி நடிப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அரண்மனை 3 படத்தில் சுந்தர்.சி முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அரண்மனை 4 படத்திலும் சுந்தர்.சி நடிக்க முடிவெடுத்திருப்பது ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது. மேலும் இந்த படமும் முந்தைய பாகங்களைப் போலவே சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெரும் என எதிர்பார்க்கலாம்.