சுந்தர் சி, வடிவேலு கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா.? கேங்கர்ஸ் முதல் நாள் கலெக்ஷன்

Gangers First Day Collection: கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் உருவாகி இருந்தது. வின்னர், தலைநகரம் என இவர்கள் கூட்டணியில் உருவான படங்கள் எல்லாமே ஹிட்டுதான்.

ஆகையால் இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் நேற்றைய தினம் படம் திரையரங்குகளில் வெளியானது. இதில் கேத்தரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

படம் முழுக்க முழுக்க நகைச்சுவை ஜானரில் எடுக்கப்பட்டிருந்தது. சுந்தர் சி PT வாத்தியாராக நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 316 திரையரங்குகளில் வெளியானது.

கேங்கர்ஸ் முதல் நாள் கலெக்ஷன்

மேலும் முதல் நாலே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வசூலை எட்டி இருக்கிறது. இது ஒரு நல்ல கலெக்ஷனாக பார்க்கப்படுகிறது. சுந்தர் சி அரண்மனை 4, மதகத ராஜா என தொடர் வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

அந்த வரிசையில் கேங்கர்ஸ் படமும் ஹட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறது. மேலும் படத்திற்கு வரும் பாசிட்டிவ் விமர்சனத்தால் குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்க்க தியேட்டருக்கு மக்கள் படையெடுக்கின்றனர்.

அதுவும் சனி, ஞாயிறு விடுமுறை வர உள்ளதால் படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. கேங்கர்ஸ் படம் மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு நல்ல வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.