Sundar C : சுந்தர் சிக்கு இப்போது சுக்கிர திசை போகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் கை வைக்கும் படம் எல்லாம் ஹிட் ஆகி வருகிறது. போதாக்குறைக்கு பல வருடங்களுக்கு முன்பு எடுத்த மதகத ராஜா படம் இப்போது வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருக்கிறது.
இந்த சூழலில் சமீபத்தில் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் கேங்கர்ஸ் படம் வெளியானது. இதில் வடிவேலு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி டாப் நடிகர்களின் நிலையை புட்டு புட்டு வைத்து விட்டார். அதாவது சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் 300 கோடி, 500 கோடி வசூல் செய்தது என்ற தகவல் வெளியாகிறது.
படங்களின் வசூல் குறித்து பேசிய சுந்தர் சி
அப்படி வெளியாகும் போஸ்டர் எல்லாமே பொய் தான் என்று சுந்தர் சி கூறி இருக்கிறார். தயாரிப்பாளர் அந்த ஹீரோவுடன் அடுத்த படம் பண்ண வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். அதோடு அந்த ஹீரோவின் ஹைப்பை ஏற்ற பார்க்கிற வேலை இதெல்லாம் என்று கூறியுள்ளார்.
நம்ம ஊர்ல எப்படி இவ்ளோ பணம் வசூல் செய்ய முடியும். ஏதாவது ஒன்னு ரெண்டு படம் இந்திய அளவில் பெரிய ஹிட் ஆனா நம்பலாம். மத்தபடி இதெல்லாம் பொய் என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார் சுந்தர் சி.
அப்படி என்றால் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் பல கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே சொல்வது பொய் தான் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மேலும் சுந்தர் சி யின் பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.