மூக்குத்தி அம்மன் 2க்கு லீவு விட்ட சுந்தர் சி.. 25வது ஆண்டை கொண்டாட ரைட் போட்ட ஸ்கெட்ச்

 சுந்தர் சி ஓய்வில்லாமல் படங்களை இயக்கி  கொண்டிருக்கிறார். மதகஜராஜாவில் ஆரம்பித்தவர் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்து அசத்தியுள்ளார். இப்பொழுதும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆர்கே பாலாஜி, சூர்யா படத்தில் பிஸியாக இருப்பதாலும் பெரும் தொகையை சம்பளமாக கேட்டதாலும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்  இந்த படத்தை சுந்தர் சி இடம் ஒப்படைத்து விட்டார். இதில் நயன்தாரா நடித்த வருகிறார்.

 மதகஜராஜா, அரண்மனை 4, கேங்கர்ஸ் என இவர் தொட்டதெல்லாம் ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து இந்த மூன்று படங்கள் கொடுத்த நல்ல  வசூலால் இந்த  படங்களின் தயாரிப்பாளர்களுக்கு  ஜாக்பாட் அடித்துள்ளது. அதனால் சுந்தர் சிக்கு பல ஆபர்கள் கொடுத்து வருகிறார்கள்.

 ஆரம்பத்தில் குடும்பத்துடன் லண்டன் சென்று இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க திட்டம் போட்ட சுந்தர்சி இப்பொழுது அதை மாற்றிவிட்டார். அவரது 25 வது திருமண நாள் வரப்போகிறது. அதற்காக குடும்பத்துடன் இப்பொழுது சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்.

 சிங்கப்பூரில் ஒரு மாத ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இந்தியா திரும்பியவுடன் தான் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில்  இணைய உள்ளார். அதுவரை ஒரு மாதம் ஷூட்டிங்கிற்கு லீவு கொடுத்துள்ளார். நயன்தாராவும் பிசியாக இருப்பதால் அவர் மற்ற பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

shankar

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். சினிமா ரசிகர்களுக்கு உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →