தொலைக்காட்சியில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று பிரபலமானவர்கள் சிலர் மட்டுமே. சந்தானம், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையிலும் பட்டையை கிளப்பி வருகிறார்கள். அதிலும் சிவகார்த்திகேயன் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது.
ஆனால் சன் டிவியில் செல்ல பிள்ளையாக வலம் வந்த ஒருவரால் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. அதுவும் இரண்டு படங்களை மட்டுமே இயக்கி வெள்ளித்திரையில் இருந்து ஒதுங்கி விட்டார். ஆனால் சின்னத்திரையில் இவர் பல சாதனைகள் படைத்துள்ளார்.
அதாவது கோபி என்றாலே நமக்கு உடனே ஞாபகம் வருவது மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் தொடரின் இயக்குனர் திருமுருகன் தான். இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கோகுலம் காலனி என்ற தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சன் டிவியில் பல சூப்பர் ஹிட் தொடர்களை கொடுத்துள்ளார்.
இவருடைய மெட்டி ஒலி தொடர் தற்போதும் ரசிகர்களின் ஃபேவரிட் தொடராக உள்ளது. இதைத்தொடர்ந்த நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற தொடர்களை திருமுருகன் இயக்கி உள்ளார். இதில் நாதஸ்வரம் தொடரில் ஒரு எபிசோடை சிங்கிள் சாட்டில் எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
இவ்வாறு சின்னத்திரையில் பல சாதனைகள் படைத்த திருமுருகன் வெள்ளித்திரையில் இரண்டு படங்கள் மட்டுமே எடுத்துள்ளார். முதலில் பரத் நடிப்பில் வெளியான எம் மகன் படத்தை எடுத்திருந்தார். இப்படத்தில் வடிவேலு பரத்தின் தாய்மாமனாக நடித்திருந்தார். இதில் வடிவேலு நகைச்சுவை மற்றும் உணர்ச்சி பொங்கும் காட்சிகளிலும் நடித்து அசத்து இருப்பார்.
இதைத் தொடர்ந்து திருமுருகன் இரண்டாவதாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திலும் வடிவேலு சொரிமுத்து அய்யனார் என்று வித்தியாசமான கெட்டப்பில் காமெடி செய்திருந்தார். இந்த இரண்டு படங்களில் வடிவேலுவை வித்தியாசமான கோணத்தில் திருமுருகன் காட்டு இருந்தார். ஆனால் வென்ளி திரையே வேண்டாம் என்று இந்த இரண்டு படங்களுடன் திருமுருகன் ஒதுங்கி விட்டார்.