Super Good Films: கவித்துவமான காதல் படங்களுக்கும் குடும்ப பாங்கான சப்ஜெக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை தயாரிப்பதில் குட், இந்த சூப்பர் குட் பிலிம்ஸ். முரளி, சித்தாரா, ஆனந்த் பாபு, சார்லி நடித்த புது வசந்தத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சூப்பர் குட் பிலிம்ஸ் இன் ஆர் பி சவுத்ரி.
இன்றைய நடைமுறையில் நடிகர்களுக்கு கதை பிடித்தால் மட்டும் தயாரிப்பாளர் ஓகே சொல்லிவிட, ஆர் பி சவுத்ரியோ கொஞ்சம் வித்தியாசமாக கதை கொண்டு வரும் இயக்குனரிடம் பொறுமையாக முழு கதையையும் கேட்டு திருப்தியான பிறகு நடிகரிடம் கதை சொல்ல அனுப்புவாராம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் படத்தை தயாரித்து வருகின்றனர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினர். லிங்குசாமி, எழில், பேரரசு, ராஜசேகர் என 45 புதிய இயக்குனர்களை திரையில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதிகமாக கே எஸ் ரவிக்குமாரின் சூரியவம்சம், நாட்டாமை போன்ற ஆறு படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டவை.
வருடத்திற்கு நாலு படம் என திட்டம் போட்டு தயாரித்த ஆர்பி சவுத்ரி இப்போது படம் வெளியிடுவதில் உள்ள சிக்கலால் இரண்டாக குறைத்துள்ளார். கடமையை மட்டுமே செய்வேன் பலனை எதிர்பார்க்க மாட்டேன் என்று கூறும் அவர் சினிமா எனக்குத் தொழில் அதில் இயக்குனரின் நன்றியை என்றும் எதிர்பார்ப்பதில்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
விஜய் நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி ஜில்லா போன்ற படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் உடையது. நூறாவது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் நூறாவது படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று கனவுடன் உள்ளனர்.
ஆர் பி சவுத்ரியின் மகன்கள் ஆன ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் படங்களை இவரே தயாரித்தது குறிப்பிடத்தக்கது. வயதான நிலையில் ஆர்பி சௌத்ரி அவர்கள் ஓய்வு பெறும் நோக்கோடு தனது 93 வது படமான ஜில்லாவில் தனது நான்கு மகன்களை பார்ட்னர்களாக அறிவித்து அவர்களிடம் சூப்பர் குட் பிலிம்சை ஒப்படைத்து உள்ளார்.