சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். இவருக்கு பின் எத்தனையோ ஹிட் நடிகர்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், தனக்கான இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 70 வயதாகும் ரஜினிகாந்த் இன்று வரை சூறாவளி காற்றாக சுழன்று கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து நான்கு படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.
ஜெயிலர்: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முக்கால் சதவீதம் முடிந்து விட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த்துக்கு மட்டுமல்லாமல் இயக்குனர் நெல்சனுக்கும் அவருடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் ஆகும்.
லால் சலாம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இதில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கிறார்.
தலைவர் 170: லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்குகிறார். இந்த படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை எடுக்கப்பட இருக்கிறது.
தலைவர் 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதை மிகப் பெரிய கனவாக வைத்திருந்தார். தற்போது இது உறுதியாக இருக்கிறது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதா அல்லது உலக நாயகன் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறதா என்பதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.
பாட்ஷா மற்றும் படையப்பா போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த பிறகு ரஜினி வருடத்திற்கு ஒரு படம் என முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது ஜெயிலர் படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே சட்டென மும்பைக்கு பறந்து லால் சலாம் கடைப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த வயதிலும் அடுத்தடுத்து ரஜினி படங்கள் நடித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.