1. Home
  2. கோலிவுட்

ரேஸில் இருந்து பின் வாங்கிய சூர்யா.. ரெட்ரோ கொடுத்த மரண அடி

ரேஸில் இருந்து பின் வாங்கிய சூர்யா.. ரெட்ரோ கொடுத்த மரண அடி

Suriya : சமீபத்தில் சூர்யாவிற்கு ரெட்ரோ படம் வெளியாகி இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெட்டே நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் கலமையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

அதோடு பூஜா ஹெட்டேவை ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்திருந்தனர். இவர் நடித்த படங்கள் எல்லாமே தொடர்ந்து ப்ளாப் ஆகிறது என்றும் விமர்சித்திருந்தனர். இதனால் சூர்யாவுக்கு இந்த படமும் சருக்களை தான் கொடுத்திருக்கிறது.

ரெட்ரோ படத்துடன் வெளியான சசிகுமார் டூரிஸ்ட் பேமிலி படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக உள்ளது. ஆகையால் ரெட்ரோ படத்தின் வசூல் டூரிஸ்ட் ஃபேமிலியால் பாதித்துள்ளது.

ரெட்ரோ பயத்தால் பின் வாங்கிய சூர்யா

இந்த சூழலில் சூர்யாவின் 45 வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான பைசன் தீபாவளிக்கு வெளியாகிறது.

ஆகையால் சூர்யாவின் 45ஆவது படம் தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கி இருக்கிறது. ஏற்கனவே டூரிஸ்ட் ஃபேமிலியால் ரெட்ரோ வசூல் குறைந்திருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் படத்தால் இந்த படத்திற்கு ஆபத்து ஏற்படும் என இவ்வாறு முடிவு எடுத்துள்ளனர்.

அதோடு சர்தார் 2 படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் தள்ளி போக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் பைசன் படம் சிங்கிளாக தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.