மே ஒன்று உழைப்பாளர்கள் தினம். அதே தேதியில் அஜித் தனது 54 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். எப்பொழுதுமே அவர் பிறந்த நாளில் அவர் நடிப்பில் ஏதாவது ஒரு புது படம் ரிலீஸ் ஆகும் . ஆனால் இந்த வருடம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அட்லி படங்கள் ரிலீஸ் ஆனதால் வாய்ப்பு இல்லாமல் போனது. ரிலீஸ் ஆக உள்ள சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் போட்டி போடும் 5 படங்கள்.
டூரிஸ்ட் பேமிலி: சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் நகைச்சுவை படமாக வெளிவர உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து மொத்த குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தது. வித்தியாசமான கதையில் இருவரும் நடித்த அசத்து இருக்கிறார்கள். இது மே 1 ரிலீஸ் ஆக உள்ளது.
ஹிட் 3: ராஜமௌலியின் நான் ஈ படத்துக்கு பிறகு தமிழ்நாட்டிலும் நானி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பொழுது அவரின் பான் இந்தியா படமான “ஹிட் 3” மே ஒன்றாம் தேதி ரிலீசாகிறது இந்த படத்தில் கே ஜி எஃப் புகழ் ஸ்ரீநிதி ஹீரோயினாக நடித்துள்ளார்.
மங்காத்தா: வெங்கட் பிரபு அஜித் கூட்டணியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் மங்காத்தா. இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். அஜித் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு விருந்தாக மங்காத்தா படம் ரிலீஸ் ஆகிறது. அர்ஜுன், த்ரிஷா என அனைவரும் இந்த படத்தில் அசத்தியிருந்தனர்.
வீரம்: மற்றொரு படமான வீரமும், அஜித் பிறந்தநாள் அன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தமன்னா மற்றும் ரமேஷ் கண்ணா போன்றவர்களின் நடிப்பில் காமெடி கலந்த ஆக்சன் படமாக வெளிவந்தது.
பில்லா: 1980 களில் வெளிவந்த படம் பில்லா. ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தை பின்னர் 2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் ரீமேக் செய்து அசத்தினார். அதே கதை மீண்டும் அஜித் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படமும் மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று இப்பொழுது வெளியாக இருக்கிறது.