Retro: சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் மே 1ம் தேதி ரெட்ரோ வெளியானது. 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்த இப்படம் முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனாலும் படம் தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படத்துடன் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கும் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த இரு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ரெட்ரோ பின்னடைவில் தான் இருந்தது. இதனால் சூர்யாவிற்கு இந்த படமும் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்ற பேச்சு இருக்கிறது.
ரெட்ரோ ஒட்டு மொத்த வசூல் இவ்வளவா
ஆனால் அந்த விமர்சனங்களை முறியடிக்கும் வகையில் தற்போது உலக அளவில் ரெட்ரோ செய்துள்ள வசூலை அறிவித்துள்ளது தயாரிப்பு தரப்பு. அதன்படி இதுவரை மொத்தமாக 235 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது.
இது ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியம் என நன்றியை பட குழு தெரிவித்துள்ளது. ஆனால் வழக்கம் போல இணையவாசிகள் இதை கலாய்த்து வருகின்றனர்.
இதெல்லாம் கொஞ்சம் கூட நம்புற மாதிரியே இல்லையே. எதற்கு இப்படி பொய்யான அறிக்கை என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சூர்யா ரசிகர்கள் இந்த அறிவிப்பால் இப்போது சந்தோஷத்தில் இருக்கின்றனர் .