Retro Trailer: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம் என பலர் நடித்து இருக்கும் ரெட்ரோ மே 1ம் தேதி உலக அளவில் வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அவரின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. அதிலும் கனிமா பாடல் தான் இப்போது சோஷியல் மீடியா ட்ரெண்டிங்.
தற்போது படத்திற்கான பிரமோஷன் சூடு பிடித்துள்ள நிலையில் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்த அத்தனை சம்பவங்களும் உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
ரெட்ரோ ஸ்டைலில் சூர்யாவின் நடை உடை பேச்சு என எல்லாமே வித்தியாசம் தான். அவருக்கு இணையாக பூஜா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் என்பது அவருடைய லுக் பாக்கும்போது தெரிகிறது.
அதேபோல் ஜெயராம் கெட்டப் கூட வித்தியாசம் தான். இந்த நடிகர் இந்த கேரக்டர் தான், கதை இதுதான் என்பதை முடிவு செய்ய முடியாத அளவுக்கு இருக்கிறது ட்ரெய்லர்.
அதேபோல் சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேதான் பார்ப்பீங்க என்பதில் தொடங்கி ஒவ்வொரு வசனங்களும் சூர்யாவுக்கு மாஸாக இருக்கிறது. மேலும் இயக்குனர் அவரை கெத்தாகவும் காட்டி இருக்கிறார்.
இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதேபோல் ரசிகர்களும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என வாழ்த்தி கமெண்ட் போட்டு வருகின்றனர்.