சூர்யா, கார்த்தி குடும்பத்தை 17 வருடமாக கழுத்தறுக்கும் தயாரிப்பாளர்.. கூடவே இருந்து குழி பறித்த சம்பவம்

Suriya-Karthi: மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் வாரிசுகளான சூர்யா, கார்த்தி இருவரும் இப்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களின் மார்க்கெட்டை காலி செய்யும் அளவுக்கு 17 வருடமாக கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

அந்த வகையில் சிவகுமார் குடும்பத்து உறவான ஞானவேல் ராஜா சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து கார்த்தியின் பருத்திவீரன், நான் மகான் அல்ல என இவர்கள் இருவரின் அடுத்தடுத்த படங்களை தயாரித்தார்.

அதில் சில படங்கள் வெற்றிவாகை சூடினாலும் பல படங்கள் சுமார் நிலையில் இருந்தது மட்டுமல்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது. அப்படித்தான் கார்த்தியின் கொம்பன் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் பல தடைகள் வந்தது. அதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பையும் நடத்தி படம் வெளியாவதற்கு உதவி செய்தது.

அதேபோன்று சிங்கம் 3 மூன்று முறை ரிலீஸ் தள்ளிப்போனது. இதனால் சூர்யா சில சிரமங்களுக்கும் ஆளானார். இதை பற்றி கூறியிருக்கும் தயாரிப்பாளர் தாணு சிவகுமார் குடும்பம் எப்படிப்பட்டவர்கள். அவர்கள் குடும்பத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஞானவேல் ராஜா நடந்து கொள்கிறார்.

இதனால் அவர்கள் பல சங்கடங்களுக்கு ஆளாகின்றனர் என பல வருடங்களுக்கு முன்பே ஒரு பேட்டியில் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார். அதை இப்போது ட்ரெண்ட் செய்யும் சூர்யா ரசிகர்கள் அப்படின்னா கங்குவா படத்தின் நிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனென்றால் கடந்த வருடம் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளிவரவில்லை. விக்ரம், ராக்கெட்டரி போன்ற படங்களில் கேமியோ ரோலில் தான் அவர் நடித்திருந்தார். வணங்கான் படமும் டிராப் ஆனதில் கங்குவாவை தான் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் அது தாமதமாவதால் ஞானவேல் ராஜா, சூர்யா கூடவே இருந்து குழி பறிக்கிறார் என கோபத்தோடு கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.