1. Home
  2. கோலிவுட்

கங்குவா, ரெட்ரோ கொடுத்த அடி.. பழனி ஆண்டவரை நம்பிய சூர்யா

கங்குவா, ரெட்ரோ கொடுத்த அடி.. பழனி ஆண்டவரை நம்பிய சூர்யா

Suriya : சூர்யா கடந்த பத்து வருடங்களாக ஹிட் படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் வெற்றி பெற்றாலும் ஓடிடியில் வெளியானதால் ரசிகர்களால் கொண்டாட முடியவில்லை. மிகப்பெரிய பட்ஜெட்டில் கங்குவா படம் உருவானது.

இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏகப்பட்ட நஷ்டத்தை கொடுத்தது. பிறகு சூர்யா நம்பி வெளியிட்ட படம் தான் ரெட்ரோ. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் போட்டியாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியானது.

ஆகையால் அந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் ரெட்ரோ படத்தின் வசூல் குறைந்தது. இப்படி எந்த பக்கம் போனாலும் சூர்யாவுக்கு தொடர்ந்து ஏதோ ஒரு சிக்கல் ஏற்பட்டு படம் தோல்வி அடைந்து விடுகிறது. இதை அடுத்த இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45 வது படம் உருவாகி வருகிறது.

கடவுளை நம்பி இறங்கிய சூர்யா

கங்குவா, ரெட்ரோ கொடுத்த அடி.. பழனி ஆண்டவரை நம்பிய சூர்யா
suriya-46

சூர்யாவின் மற்றொரு படம் தான் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடிக்க உள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதற்கான பட பூஜை இன்று பழனியில் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து தொடங்கி இருக்கின்றனர். தொடர் தோல்வியால் இப்போது பழனி ஆண்டவரை நம்பி சூர்யா இறங்கி இருக்கிறார்.

வெங்கி அட்லூரி இதற்கு முன்னதாக வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அதுவும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சூர்யாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.