திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும் சூர்யாவின் குடும்பம்.. ஞானவேல் ராஜாவின் நரி தந்திரம்

Actor Suriya: கடந்த சில வாரங்களாக பருத்திவீரன் பஞ்சாயத்து தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்வது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அமீருக்கு ஆதரவாக தான் பல பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.

நேற்று கூட சுதா கொங்காரா அமீரின் திறமையை பற்றி ட்வீட் போட்டிருந்தார். இதற்கு முக்கிய காரணம் ஞானவேல் ராஜா இழுத்து விடும் ஏழரை தான். ஏற்கனவே இந்த விவகாரத்தில் கார்த்தி ஏன் மௌனமாக இருக்கிறார் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.

இவ்வளவு நடந்தும் சிவகுமாரின் குடும்பம் அமைதியாக இருப்பது ஞானவேல் ராஜாவுக்கு பயந்து தான் என்ற ஒரு தகவலும் இப்போது தீயாக பரவி வருகிறது. குடும்ப உறவினராக இருக்கும் இவரை இப்போது பகைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் தான் அவர்கள் சிக்கி இருக்கிறார்கள்.

ஒருவேளை அமீருக்கு ஆதரவாக அவர்கள் பேசினால் ஞானவேல் ராஜா இவர்களுடைய வண்டவாளத்தையும் தண்டவாளத்தில் ஏற்ற தயங்க மாட்டார். அதனாலேயே திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவர்கள் இருக்கிறார்களாம். அந்த அளவுக்கு ஞானவேல் ராஜா நரி தந்திரமானவர் என ஏற்கனவே தயாரிப்பாளர் தாணு ஒரு முறை வெளிப்படையாக கூறியிருந்தார்.

கௌரவமாக இருக்கும் சிவக்குமார் குடும்பத்தில் ஞானவேல் ராஜா ஆமை போல் நுழைந்து விட்டதாக அவர் ஒருமுறை ஆவேசமாக கூறியிருந்தார். தற்போது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. சமீபத்தில் கூட ஞானவேல் ராஜா அமீரின் ராம் படத்தில் மேக்கிங் சரியில்லை என சுதா கொங்காரா கிண்டல் அடித்ததாக கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கத்தான் சுதா, அமீர் பற்றி ட்வீட் போட்டிருந்தார். இப்படியாக ஞானவேல் ராஜா தன் தப்பை மறைக்க பல விஷயங்களை அம்பலப்படுத்தி வருகிறார். அதன் காரணமாகவே சூர்யா, கார்த்தி இருவரும் தற்போது அமைதி காத்து வருகின்றனர். ஆக மொத்தம் புலிவால் பிடித்த கதையாக மாறி இருக்கிறது அவர்களின் நிலைமை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →