மில்க் பியூட்டி தமன்னாவை வலையில் சிக்க வைத்த விஜய்.. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டான்

Actress Tamanna: தமன்னா தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மற்ற மொழிகளிலும் தமன்னாவின் கொடி ஓங்கி பறந்தது. கோலிவுட்டில் இருந்த பாலிவுட் வரை பல ஹிட் படங்களை தமன்னா கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவரது கெட்ட நேரம் தொடர்ந்து பிளாப் கொடுத்ததால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனது. இப்போது தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள தமன்னா ரஜினியின் ஜெயிலர் படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக தமன்னாவை பற்றிய கிசுகிசுக்கள் அதிகம் வரத் தொடங்கியது. ஏற்கனவே நடிகர் கார்த்தி உடன் சில படங்களில் ஜோடி போட்டதால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு வெளியானது. ஆனால் கார்த்தி தனது குடும்பத்தார் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது விஜய் வர்மாவை காதலிக்கும் செய்தியை தமன்னா உறுதிப்படுத்தி இருக்கிறார். இப்போது இவர்கள் இருவரும் இணைந்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்தபோது எங்களுக்குள் காதல் மலர்ந்ததாக தமன்னா சமீபத்திய ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சமூகத்தில் தனக்கு துணையாக வருபவர் தான் நினைத்தபடி தான் இருக்க வேண்டும் என சிலர் எண்ணுவார்கள். ஆனால் விஜய் வர்மா என்னை அப்படி எதுவுமே மாற்றிக் கொள்ள சொல்லவில்லை. மேலும் சரியான ஒரு நபரை தேர்ந்தெடுக்க புரிதல் மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

விஜய் வர்மாவிடம் அது தனக்கு கிடைத்ததாக தமன்னா கூறி இருக்கிறார். இவ்வளவு நாள் தமன்னாவின் கணவராக வருபவர் யார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நேற்று வந்த விஜய் வர்மா தூக்கிவிட்டார். இந்த சூழலில் தமன்னாவுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் நச்சரிக்க தொடங்கிவிட்டனர்.