1. Home
  2. கோலிவுட்

தன்னைவிட கம்மியான சொத்து.. காதலுக்கு காசு, அந்தஸ்து முக்கியமில்ல என கூவும் தமன்னா

தன்னைவிட கம்மியான சொத்து.. காதலுக்கு காசு, அந்தஸ்து முக்கியமில்ல என கூவும் தமன்னா
இவர்களுக்கு மத்தியில் காதலுக்கு பணம் முக்கியம் இல்லை என்று கூறும் வகையில் இருக்கிறது தமன்னாவின் காதல்.

Actress Tamannah: கடந்த சில நாட்களாகவே தமன்னா பற்றிய செய்திகள் தான் சோசியல் மீடியாவை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. பலரும் வாயடைத்து போகும் அளவுக்கு கிளாமர் களத்தில் குதித்திருக்கும் இவர் இதன் மூலம் மீடியாக்களுக்கு சரியான தீனி போட்டுள்ளார்.

இது ஒரு புறம் இருந்தாலும் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவுடன் இவர் டேட்டிங் செய்து வருவது பல விமர்சனங்களை முன்வைத்தது. ஆனால் இது பற்றி எந்த விளக்கமும் அளிக்காத தமன்னா அண்மையில் தான் தன்னுடைய காதலை பகிரங்கமாக போட்டு உடைத்தார்.

அதைத்தொடர்ந்து இவர்களின் ஜோடி பொருத்தத்தை பற்றி பலரும் சிலாகித்து பேசி வருகின்றனர். அதை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அந்தஸ்து சொத்து விவகாரம் பற்றிய தகவலும் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதாவது தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.

இதன் மூலம் கை நிறைய சம்பாதித்து வரும் அவர் இப்போது 110 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். ஆனால் அவருடைய காதலர் விஜய் வர்மா வெறும் 17 கோடிக்கு மட்டுமே சொந்தக்காரராக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தமன்னா அந்தஸ்து, காசு, பணம் எதுவும் பார்க்காமல் காதலில் விழுந்திருப்பது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

ஏனென்றால் ஹீரோயின்கள் என்றாலே நல்ல புளியங்கொம்பாக பார்த்து தான் செட்டில் ஆவார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை, தொழிலதிபர், டாப் ஹீரோ என யாரையாவது திருமணம் செய்து கொண்டு அவர்கள் சொகுசாக வாழ்ந்து வருவார்கள். இவர்களுக்கு மத்தியில் காதலுக்கு பணம் முக்கியம் இல்லை என்று கூறும் வகையில் இருக்கிறது தமன்னாவின் காதல்.

இவ்வாறாக தன்னைவிட கம்மியான சொத்து மதிப்பு இருந்தாலும் பரவாயில்லை என அவர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இதைத்தான் தற்போது பாலிவுட் திரையுலகினர் ஆச்சரியமாக பேசி வருகின்றனர். மேலும் மில்க் பியூட்டியான இவருடைய மனசு கூட பால் மாதிரி வெள்ளையாக இருக்கிறது என ரசிகர்களும் ஓவராக புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.