Thalaivan Thalaivi Box Office Report: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஜோடி சேர்ந்திருக்கும் தலைவன் தலைவி கடந்த வாரம் வெளியானது. ரிலீசுக்கு முன்பு படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

அதேபோல் பாடல்களும் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனை மாமியார் நாத்தனார் என சராசரி மனிதனின் வாழ்க்கை தான் இப்படம்.
இதில் சண்டை சச்சரவுகளுக்கு இடையே கணவன் மனைவியின் காதல் நீடித்ததா இல்லையா என்பதை ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் அழகாக சொல்லி இருக்கிறார் பாண்டிராஜ். இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்
முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வசூலும் ஏறுமுகமாக இருந்த நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் படி மூன்று நாட்களில் இதுவரை தலைவன் தலைவி 25 கோடிகளை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. இந்த வசூல் இந்த வாரமும் அதிகரிக்கும் என தெரிகிறது.
தற்போது பேமிலி ஆடியன்ஸ் தொடர்ச்சியாக படம் பார்க்க தியேட்டருக்கு வருகின்றனர் அதனால் வார நாட்களாக இருந்தாலும் கூட வசூலில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்கின்றனர்.
ஆக மொத்தம் மகாராஜாவின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்த வெற்றியையும் பதிவு செய்து விட்டார். இப்படத்துடன் பகத் பாஸில், வடிவேலு நடித்த மாரீசன் படமும் வெளியானது. ஆனால் அதை ஓவர் டேக் செய்திருக்கிறது தலைவன் தலைவி.