ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தின் முழு கதை என்ன என்பது தெரியவந்துள்ளது. தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். முழு படப்பிடிப்பும் இன்னும் இரண்டே நாட்களில் நிறைவடை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரஜினி தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதை முடித்த பிறகு தலைவர் 170 படத்தில் இணைகிறார். அதற்கு முன்பு தற்போது இந்த படத்தின் முழு கதை என்ன என்பது இணையத்தில் லீக் ஆகி சூப்பர் ஸ்டாரை அப்செட் ஆகி உள்ளது.
தற்போது தலைவர் 170 படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். ஜெய்பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் உருவாகிறது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ஓய்வு பெற்ற முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். அதிலும் இதில் ரஜினி என்கவுண்டருக்கு எதிராக போராடும் கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
ஏனென்றால் ஜெய்பீம் படத்தைப் போலவே இரண்டாவது படத்திலும் டிஜே ஞானவேல் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய கதையைத்தான் கையில் எடுத்திருக்கிறார். இந்த படமும் ஜெய்பீம் படத்தைப் போலவே உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்க திட்டமிட்டிருப்பதால் படம் கண்டிப்பாக வித்தியாசமான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுக்கப் போகிறது.
இந்த படத்தில் சிறை தண்டனை, தூக்கு தண்டனை, நீதிமன்றம் என இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பின்புலத்திலேயே கதை அமைந்திருப்பதால் இதில் டிஜே ஞானவேல் எப்படி வித்தியாசம் காட்டப் போகிறார் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் தலைவர் 170 படத்தைக் குறித்த கதை கரு என்ன என்பது சமூக வலைதளங்களில் லீக் ஆகி சூப்பர் ஸ்டார் ரஜினியையும் டென்ஷன் ஆகி உள்ளது.