காதலுக்கு மரியாதை விஜய்யை திரும்ப கொண்டு வரும் தளபதி 68.. பல கோடிகளை வாரி இறைக்கும் ஏஜிஎஸ்

Vijay- Thalapathy 68: விஜய்யின் லியோ படத்தின் ஹைப் இப்போது அதிகமாக இருக்கும் நிலையில் தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடுதலாக தான் இருக்கிறது. லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பல விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மற்றும் காட்சிகள் இடம்பெறுவதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.

இவ்வாறு லியோ படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்து கொண்டு இருந்தாலும் விஜய் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கிறார். இப்போது விஜய்க்கு 49 வயது ஆகும் நிலையில் இந்த படத்தில் இளைஞனாக காட்ட உள்ளார்களாம்.

இதற்காக வெளிநாடு சென்று லுக் டெஸ்ட் எடுத்துள்ளனர். அவ்வாறு அமெரிக்காவுக்கு சென்று நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யை 25 வயது இளைஞனாக மாற்ற ஏஜிஎஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 20 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறதாம். விஜய்யின் சம்பளமே இந்த படத்தில் பெரிய தொகை என கூறப்பட்டது.

இப்போது அவரது தோற்றத்திற்காகவே கிட்டத்தட்ட 20 கோடி செலவு செய்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் கிட்டதட்ட 25 வருடங்களுக்கு முன்பு விஜய் எப்படி இருந்தாரோ அதே போல் தளபதி 68 படத்தில் தத்ரூபமாக இருப்பாராம். அதாவது கிட்டத்தட்ட காதலுக்கு மரியாதை பட சமயத்தில் இருந்த விஜய்க்கு மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர். அந்த அளவுக்கு De-Aging என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் சமீபத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் முதல் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு நடனப்புயல் பிரபுதேவா தான் நடனம் அமைத்து இருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்த ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்த இருக்கின்றனர். லியோ ரிலீஸ் சமயத்தில் மட்டும் சிறிது இடைவெளி எடுக்க உள்ளனர்.

சமீபகாலமாக முழுக்க முழுக்க ஆக்சன் படங்களில் விஜய் நடித்து வரும் நிலையில் இந்த படம் கொஞ்சம் காமெடி ஜானரில் எடுக்க உள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் விஜய் படம் என்பதால் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என கோடிகளை வாரி இறைத்து வருகிறது. மேலும் லியோ ரிலீஸுக்கு பிறகு இந்த படத்தை பற்றிய அப்டேட்டுகள் வெளியாக இருக்கிறது.